கோவிட்-19 வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்தே பரவியிருக்கக் கூடும் – CIA தகவல்

வாஷிங்டன், ஜனவரி-27 – கோவிட்-19 கிருமி விலங்குகளிடமிருந்து பரவியதை விட, சீனாவின் ஆய்வுக்கூடத்திலிருந்து தான் வெளியில் கசிந்திருக்க வேண்டும்.
அதன் பூர்வீகம் குறித்து அமெரிக்க மத்திய உளவுத்துறையான CIA வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தில் CIA-வின் புதிய இயக்குநராக John Ratcliffe அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவ்வறிக்கை வெளியானது.
பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே கோவிட்-19-ன் பூர்வீகத்தை கண்டறிவதே தனது தலையாய நோக்கம் என்றார் அவர்.
சீனா, வூஹான் நகரில் உள்ள கிருமியியல் ஆய்வுக்கூடத்திலிருந்தே கோவிட் கிருமி பரவியிருக்கக் கூடும் என தாம் நம்புவதாகக் கூறிய Ratcliffe, CIA இனி அமைதிக் காக்காது என்றார்.
ஆய்வுக் கூடத்திலிருந்து தான் கோவிட் பரவியதாகக் கூறி வருவோர், அதன் முதல் நோய் தொற்று வூஹானில் உள்ள கொரோனா வைரஸ் முதன்மை ஆய்வகத்திலிருந்தே பரவியாக அடித்துக் கூறுகின்றனர்.
SARS போன்ற கிருமிகளைப் பரப்பும் வௌவால்கள் கூட்டமாக வாழும் பகுதியிலிருந்து 1,000 மைல் தூரத்தில் அது அமைந்துள்ளது.
வூஹான் மீதான அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்து வரும் நிலையில், டிரம்ப்பின் இரண்டாம் தவணையில் அதிரடித் திருப்பங்கள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.