Latestமலேசியா

அமுலுக்கு வந்தது கனரக வாகனங்களுக்கான கட்டுப்பாடு; முதல் நாளில் போக்குவரத்தில் 30% மேம்பாடு

ஷா ஆலாம், பிப்ரவரி-19 – கனரக வாகனங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகள் ELITE எனப்படும் மத்திய இணைப்பு வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் இன்று அமுலுக்கு வந்தன.

சாலைப் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து அமுல்படுத்தப்பட்ட இந்தக் கட்டுப்பாடு, முதல் நாளிலேயே போக்குவரத்தை 30 விழுக்காடு மேம்படுத்தியுள்ளது.

கட்டுப்பாடுக்கு முன்பு, ELITE நெடுஞ்சாலையில் மணிக்கு 10 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் பயணித்தன;

இப்போது, அவை 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும் என, புக்கிட் அமான் போக்குவரத்து அமுலாக்க மற்றும் புலனாய்வுத் துறையின் மத்திய B மண்டலத்திற்கான நெடுஞ்சாலை அதிகாரி Amir Che Ya கூறினார்.

பெரும்பாலான கனரக வாகனமோட்டிகள் புதிய விதிமுறைக்கு ஏற்ப தங்கள் அட்டவணையை சரிசெய்யத் தொடங்கியுள்ளனர்; பயணங்களைத் தொடர்வதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட ஓய்வு இடங்களில் அவர்கள் நிறுத்துவதையும் காண முடிந்ததாக Che Ya சொன்னார்.

காலை 6.30 முதல் 9.30 மணி வரை பின்னர் மாலை 4.30 முதல் 7.30 மணி வரையிலான உச்ச நேரங்களில், ELITE மற்றும் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச் சாலையில் செல்லும் கனரக வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தும்.

இந்த கட்டுப்பாடு சாலை பயனர்களை சிரமப்படுத்துவதற்காக அல்ல, மாறாக அனைத்து நெடுஞ்சாலை பயனர்களின் வசதியை மேம்படுத்துவதற்காகவே என்றார் அவர்.

சிலாங்கூர், டெங்கில் R&R பகுதியில் PLUS நிறுவனம் ஏற்பாடு செய்த ஊடகங்களுடனான கண்காணிப்பின் போது அவர் அவ்வார் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!