Latestமலேசியா

அமெச்சூர் கோல்ப் விளையாட்டாளர்களுக்கான 28-வது உலகப் போட்டியில் வாகை சூடிய தாய்லாந்து

புக்கெட், நவம்பர்-4 – WAGC எனப்படும் அமெச்சூர் கோல்ப் விளையாட்டாளர்களுக்கான 28-வது உலகப் போட்டி அண்மையில் தாய்லாந்து புக்கெட்டில் நடைபெற்று முடிந்தது.

உபசரனை நாடான தாய்லாந்து, 37 நாடுகளைத் தோற்கடித்து அதில் ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடியது.

இப்போட்டியில் தாய்லாந்து வெல்வது இது இரண்டாவது முறையாகும்.

இரண்டாமிடத்தை தென் கொரியாவும், மூன்றாமிடத்தை சீனாவும் கைப்பற்றின.

2018 முதல் 2023 வரை தொடர்ந்தாற்போல் 5 முறை ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடிய மலேசியா, இம்முறை முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடிக்கத் தவறியது.

என்றாலும், நாட்டின் Mohammad Feyyaz Ashaari மூன்றாம் டிவிஷனுக்கான தனிநபர் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

WAGI எனப்படும் தனிநபருக்கான அழைப்பிதழ் பிரிவில் மலேசியாவின் Johan Gwee மிகக் சிறிய வித்தியாசத்தில் முதலிடத்தைத் தவறவிட்டார்.

இரவு விருந்துடன் கூடிய நிகழ்வில், வெற்றியாளர்களுக்கு புக்கெட் கவர்னர் Sophon Suwannarat பரிசுகளை எடுத்து வழங்கினார்.

பெரோடுவா நிறுவனத்தின் தலைவர் Tan Sri Asmat Kamaludin, WAGC தலைவர் ஐசாக் சாமிநாதன், WAGC தோற்றுநர் Swen Tumba-வின் புதல்வர் Johan Tumba உள்ளிட்டோரும் அதில் பங்கேற்று சிறப்பித்தனர்.

அடுத்த போட்டி 2025-ஆம் ஆண்டில் தென் கொரியாவின் ஜெஜு தீவில் நடைபெறவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!