
வாஷிங்டன், மார்ச் 14 – வியாழக்கிழமை டென்வரில் (Denver) தரையிறங்குவதற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) ஜெட் விமானத்தின் இயந்திரம் திசைதிருப்பப்பட்டபோது தீப்பிடித்தது.
இதனால் விமானத்தின் சறுக்குகளைப் பயன்படுத்தி பயணிகளை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அமெரிக்க கூட்டரசு விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் இருந்த 172 பயணிகளும் ஆறு பணியாளர்களும் விமானத்திலிருந்து வெளியேற முடிந்தது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஆறு பயணிகள் பரிசோதனைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கோலோராடோ ஸ்பிரிங்ஸிலிருந்து (Colorado Springs )போயிங் 737-800 அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines ) விமானம் உள்ளூர் நேரப்படி மாலை மணி 5.15 அளவில் டென்வரில் தரையிறங்கியது.
இயந்திர அதிர்வுகளைப் பணியாளர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, டல்லாசில் (Dallas ) தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்ட இவ்விமானம் திசைதிருப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது
விமானத்தின் இயந்திரத்திலிருந்து புகை வெளியேறியதால், அதன் இறக்கை பகுதியில் நின்று கொண்டிருந்த பயணிகள் வெளியேறும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக கூறப்பட்டது.
விமான கண்காணிப்பு வலைத்தளமான FlightRadar24 இன் படி 13 ஆண்டுகள் பழமையான இந்த விமானத்தில், GE மற்றும் Safranஇன் கூட்டு முயற்சியான CFM International தயாரித்த இரண்டு CFM56 என்ஜின்கள் (engine) பொருத்தப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக அமெரிக்க கூட்டரசு விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும், விமான நடவடிக்கைகள் வழக்கம் போல் தொடர்ந்ததாகவும் டென்வர் அனைத்துலக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.