Latestமலேசியா

India Gate உணவகம் வழங்கும் We Pay You Learn இலவசப் பயிற்சித் திட்டம்; இன்றே முந்துவீர்

கோலாலம்பூர், டிசம்பர்-8 – F&B எனப்படும் உணவு மற்றும் பானங்கள் துறையில் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்குத் தயார் செய்யும் பொருட்டு, We Pay You Learn என்ற சிறப்பு திறன் தேர்ச்சிப் பயிற்சித் திட்டத்தை பிரபல India Gate உணவகம் அறிமுகம் செய்துள்ளது.

முற்றிலும் இலவசமான இந்த 6 மாத கால பயிற்சியில், அலவன்ஸ் தொகையுடன், தங்குமிட வசதியும் வழங்கப்படுவதாக, India Gate நிறுவனரும் அதன் நிர்வாக இயக்குநருமான சரவணன் சுப்ரமணியம் தெரிவித்தார்.

உணவகத் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள், குறைந்தபட்சம் SPM தகுதியைக் கொண்டிருப்பின் இப்பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

சாதாரண உணவுப் பரிமாறுபவர் நிலையிலிருந்து எப்படி உணவக நிர்வாகியாக உயருவது, சமையலறைப் பணியாளரிலிருந்து எவ்வாறு தலைமை சமையல்காரராக உயருவது வரையிலான நடைமுறைப் பயிற்சிகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழோடு, India Gate உணவகத்திலேயே பல்வேறு நிலைகளில் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.

தாம் உட்பட India Gate உணவகத்தில் முக்கியப் பதவிகளில் உள்ள பலர், இது போன்ற நடைமுறைப் பயிற்சிகளின் வாயிலாகவே இன்றைய இடத்திற்கு உயர்ந்திருப்பதாகக் கூறிய சரவணன், இந்த 6 மாத பயிற்சித் திட்டமும் பங்கேற்பாளர்களுக்கு நிச்சயம் நன்மையைக் கொண்டு வருமென்றார்.

தொடக்கக் கட்டமாக 50 பேருக்கு மட்டுமே இப்பயிற்சி வழங்கப்படுவதால், ஆர்வமுள்ளோர் காலம் தாழ்த்தாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பின்னர் கட்டம் கட்டமாக இந்த We Pay You Learn பயிற்சித் திட்டம் விரிவடையும்.

ஆர்வமுள்ளவர்கள், jobs@indiagate.my என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, 012- 455 1930 / 012- 431 1930 / 012-750 1930 என்ற தொலைப்பேசி எண்கள் வாயிலாகவோ India Gate உணவகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!