
கீவ், மார்ச் 5 – கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் ஓவல் (Oval) அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தகராரில் ஈடுபட்டதற்காக உக்ரைய்ன் அதிபர் வோலோடிமர் ஸெலென்ஸ்கி
( Volodymyr Zelenskyy ) கவலை தெரிவித்தார்.
மேலும் அந்த சந்திப்பு ஒரு கூட்டத்தைப்போல் நடைபெறவில்லையென அவர் கூறினார். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஸெலென்ஸ்கி, நிலைமையை சரிசெய்ய வேண்டிய நேரம் இது என்றார்.
அதே நேரத்தில், நீடித்த போரை யாரும் விரும்பவில்லை என்பதோடு , அமைதிக்கான உக்ரைனின் விருப்பத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும் நிரந்தர அமைதியை ஏற்படுத்திக் கொள்வதற்கு பேச்சுக்களில் பங்கேற்பதற்கும் உக்ரைய்ன் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
உக்ரைன் மக்கள் நீடித்த அமைதியைப் பெறுவதற்கு அதிபர் டிரம்பின் தலைமையின் கீழ் உறுதியளிக்கும் தனது விருப்பத்தையும் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரேனுக்கான ராணுவ உதவியை தற்காலிகமாக நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முடிவைத் தொடர்ந்து, போரை முடிவுக்குக் கொண்டுவர சில தொடக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற திட்டத்தை ஸெலென்ஸ்கி கோடிட்டினார்.
கைதிகளை விடுவிப்பது, ஏவுகணைகள் மற்றும் டுரோன் தாக்குதல்கள் , மின் சக்தி மற்றும் குடிமக்கள் உள்கட்டமைப்புகளில் குண்டு வீச்சு தாக்குதல் மற்றும் கடலிலும் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதோடு உடனடி போர்நிறுத்ததில் ஈடுபடுவதும் இதில் அடங்கும்.
அதேவேளையில் ரஷ்யாவும் இதே போன்ற போர் நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ஸெலென்ஸ்கி வெளியிட்டார்.