
கோலாலம்பூர், மார்ச் 10 – அங்காசாபூரி (Angkasapuri ) கே.டி.எம்.பி (KTMB) ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள சுங்கை Pantai ஆற்றில் வெளிநாட்டு ஆடவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
அந்த சடலம் நேற்று மாலை மணி 4.39 அளவில் காணப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலயத்தின் இரண்டு இயந்திரத்தை சேர்ந்த 19 பேர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டதை தொடர்ந்து ஆற்றில் மிதந்து கொண்டிருந்த அந்த ஆடவரின் சடலம் மீட்கப்பட்டு PPR Seri Pantai அடுக்கு மாடி வீட்டிற்கு அருகேயுள்ள ஆற்றின் கரைக்கு மாலை மணி 5.31 மணியளவில் கொண்டு வரப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.