
கோலாலம்பூர், மார்ச் 26 – பிரபல பேச்சாளரும் பூச்சாண்டி திரைப்பட இயக்குநருமான JK.விக்கி , மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பேச்சாளர் தாமல் கோ சரவணன் (Thamal Ko.Saravanan) ஆகியோர் கலந்து கொள்ளும் வரலாற்று சொற்பொழிவு நிகழ்ச்சி மலேசியாவில் கெடா, பினாங்கு, ஈப்போ, தைப்பிங் மற்றும் கோலாலம்பூரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் நிகழ்ச்சி ஏப்ரல் 18 ஆம்தேதி காலை சுங்கைப் பட்டாணி காந்தி மண்டபத்திலும் தொடர்ந்து இரவு ஜோர்ஜ் டவுன் SRRI AKS மண்டபத்திலும் நடைபெறும்.
மேலும் பேரா தைப்பிங்கில் ஏப்ரல் 19 ஆம் தேதி சனிக்கிழமை காலை SRRI AKS மண்டபத்திலும் அதே தினத்தில் மாலை ஜெலப்பாங் SRRI AKS மாநாட்டு மண்டபத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 20 ஆம்தேதி கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் காலையும் மாலையும் இந்த சொற்பொழிவு நடைபெறவுள்ளது.
தாய் மண்ணின் பெருமைகளையும் ,தமிழர்களின் தொண்மையான பக்தித் தமிழ் வரலாற்றையும், பூர்வீகத்தையும் அறிந்து கொள்வதற்கான அற்புதமான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.
பக்தித் தமிழ் வரலாற்றில் மூழ்கி , நம் முன்னோர்களின் வீரத்தையும் , விவேகத்தையும் கலைத்திறனையும் கண் முன்னே காண விரும்பும் மலேசியர்களுக்கு பிரமாண்டமான சொற்பொழிவு நிகழ்வாக அமையும் இந்த நிகழ்ச்சி குறித்த நுழைவுச் சீட்டு மற்றும் இதர விவரங்கள் குறித்து தெரிந்துக் கொள்ள திரையில் காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.