Latestமலேசியா

QR குறியீட்டு மோசடி: கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள உணவகங்களில் தனது QRரை வைத்து ஏமாற்ற முயன்ற நபர்

கோலாலம்பூர், ஆக 21 – கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள உணவகங்களில் உள்ள கட்டண முகப்பிடங்களில் உணவு order செய்வது போல் நடித்து, தனது சொந்த QR குறியீட்டை வைத்து ஏமாற்றும் முயற்சியில் ஆடவர் ஒருவர் முயன்றுள்ளார்.

Presma எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ Mohamed Mosin Abdul Razakகிற்கு சொந்தமான உணவகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் அந்த ஆடவன் உணவகத்திற்குள் சென்று மூன்று nasi lemak  order செய்துள்ளான் .

பின்னர் தனது காரில் இருந்து பணம் எடுத்துவருவதாக வெளியே சென்ற அந்நபர் திரும்பி வரவில்லை. மற்றொரு வாடிக்கையாளர் பணம் செலுத்தியபோதுதான் இந்த மோசடி சம்பவமும் உணவகத்தின் வங்கிக் கணக்கிற்கு பணம் வரவில்லை என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் முகப்பிடத்தில் வேறு ஒரு QR குறியீடு ஒட்டப்பட்டிருப்பதைக் உணவக ஊழியர்கள் கண்டுபிடித்தததாகவும் இது குறித்து Taman Tun Dr Ismail காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதாக Mohamed Mosin  கூறினார்.

உணவக ஊழியர்கள் orderரைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தபோது, ​​அந்த ஆடவன் ஒரு QR குறியீட்டை எடுத்து கட்டண கவுண்டரில் ஒட்டியுள்ளான்.

இந்த சம்பவம் முன்கூட்டியே கண்டறியப்பட்டது , நீண்ட நேரம் சரிபார்க்கப்படாமல் இருந்திருந்தால் இதன் இழப்பு பெரிய தொகையாக இருந்திருக்கும் என Mohamed Mosin  தெரிவித்தார்.

முந்தைய நாள் ராவாங்கில் உள்ள ஒரு வளாகத்தில் அந்த நபர் இதே தந்திரத்தைப் பயன்படுத்தியதும் தனக்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!