
கோலாலம்பூர், பிப் 13 – தீபகற்க மலேசியாசியாவிலுள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்காக அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் சிறப்பு ஒதுக்கீட்டிலிருந்து 1.7 மில்லியன் ரிங்கிட்டையும் , சபா மற்றும் சரவாவிலுள்ள அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2.2 மில்லியன் ரிங்கிட்டையும் பெற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை பிரதமரின் சிறப்பு ஒதுக்கீட்டை அவர்கள் பெற்றுள்ளதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர்துறை அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தபா ( Zaliha Mustafa ) தெரிவித்தார்.
மலேசியா ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிக்கான ஒதுக்கீடு கூடுதலான ஒன்றாகும்.
இந்த ஒதுக்கீட்டின் ஏற்பாடும் விநியோகமும் தற்போதைய கொள்கை மற்றும் அரசாங்கத்தின் இப்போதைய நிதித் திறனுக்கு உட்பட்டது என நாடாளுமன்றத்தில் தெமர்லோ (Temerloh ) நாடாளுமன்ற தொகுதியின் பெரிக்காத்தான் நேசனல் உறுப்பினர் சலாமியா முகமட் நோர்
( Salamiah Mohd Nor ) எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதில் அளித்தபோது Zaliha தெரிவித்தார்.
மேலும் இந்த ஒதுக்கீடு நாடாளுமன்ற தொகுதியில் மேம்பாட்டை கொண்டுவரும் நோக்கத்திற்காக மட்டும் வழங்கப்படுவதில்லை. பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் வட்டார மேம்பாட்டு வாரியம் போன்ற சட்டப்பூர்வ அமைப்புகளிடமிருந்தும் இதர ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.