Latestமலேசியா

அரசு வேலைகளுக்கு 44.5 மில்லியன் விண்ணப்பங்கள்; 3% மட்டுமே இந்தியர்கள்

புத்ராஜெயா, ஜனவரி-10, 2019 முதல் 2023 வரை பொதுச் சேவைத் துறை வேலைகளுக்கு 44.5 மில்லியன் விண்ணப்பங்களை அரசாங்கம் பெற்றிருக்கிறது.

அவற்றில் 77 விழுக்காட்டு விண்ணப்பங்கள் மலாய்க்காரர்களுடையதாகும்.

சீனர்கள் 2 விழுக்காடும், இந்தியர்கள் 3 விழுக்காடுமாக அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பித்ததாக, பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் தான் ஸ்ரீ வான் அஹ்மாட் டாஹ்லான் அப்துல் அசிஸ் (Tan Sri Wan Ahmad Dahlan Abdul Aziz) தெரிவித்தார்.

சபா, சரவாக் பூமிபுத்ராக்கள், Orang Asli பூர்வக் குடியினர் மற்றும் இதர இனத்தவர்கள் எஞ்சிய 18 விழுக்காட்டைப் பூர்த்திச் செய்துள்ளனர்.

ஆகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே விண்ணப்பம் செய்திருந்தாலும், ஆக அதிகமாக சீன சமூகத்திற்கே அதாவது 68 விழுக்காட்டினருக்கு வேலை நியமனங்கள் கிடைத்துள்ளன.

இவ்வேளையில் கடந்த டிசம்பர் 31 வரையிலான நிலவரப்படி, போலீஸ் மற்றும் இராணுவத்தைத் தவிர்த்து அரசுத் துறையில் 1.3 மில்லியன் ஊழியர்கள் இருக்கின்றனர்.

அவர்களில் 77.7 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 5.4 விழுக்காட்டினர் சீனர்கள், 3.7 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர்.

மற்றவர்கள் 13.2 விழுக்காட்டில் உள்ளனர்.

மலாய் விண்ணப்பதாரர்களுடன் ஒப்பிடும்போது ஒவ்வோர் ஆண்டும் மலாய்க்காரர் அல்லாதோரின் நியமன விகிதம் அதிகமாக இருக்கின்றது.

ஆனால், மலாய்க்காரர் அல்லாத விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுச் சேவையில் காலியிடங்களின் எண்ணிக்கை பெருமளவில் உள்ளதாக தான் ஸ்ரீ அஹ்மாட் டாஹ்லான் சொன்னார்.

Meritocracy எனப்படும் தகுதி மற்றும் சமமான வாய்ப்பு அடிப்படையில் பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!