
பாயான் லெப்பாஸ், அக்டோபர்-27,
பினாங்கு, பாயான் லெப்பாஸில் ஒரு அலுவலகக் கட்டடத்தின் 12-ஆவது மாடியிலிருந்து 8 சென்டி மீட்டர் தடிமனுக்கு காங்க்ரீட் துண்டின் சிதறல்கள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் உயிர் சேதமோ அல்லது மோசமான பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
விழுந்த இடத்தில் சில வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரேயொரு கார் மட்டுமே சிறியளவில் சேதமுற்றது.
நண்பகல் 12.20 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தை அடுத்து தீயணைப்பு – மீட்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அசம்பாவிதம் நிகழாமலிருக்க, அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.
கட்டட வாசிகளும் அங்கு நெருங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
பராமரிப்புப் பணிகளுக்காகக் கட்டடம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



