அலோர் காஜா, நவம்பர்-9,மலாக்கா, அலோர் காஜா, தாமான் சுத்தராவில் உள்ள தேசிய சமயப் பள்ளியின் கால்வாயில், பாத்திக் வகை மலைப்பாம்பு படுத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் பள்ளி சிற்றுண்டிச் சாலை அருகே தோழிகளுடன் விளையாடிய போது, கால்வாயில் ஏதோ ஒரு பொருள் பளபளப்பாக மின்னுவதைப் பார்த்த மாணவி, தனது ஆசிரியரிடம் அது பற்றி கூறியுள்ளார்.
ஆசிரியர் வந்துபார்த்து அது மலைப்பாம்பு என்பதை உறுதிச் செய்துகொண்டு, உடனடியாக அலோர் காஜா பொது தற்காப்பு நிறுவனத்தின் (APM) அலுவகத்திற்குத் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடம் விரைந்த APM வீரர்கள் சுமார் 20 நிமிடங்கள் போராடி, 3 மீட்டர் நீளம், 30 கிலோ எடையுடைய அந்த மலைப்பாம்பைப் பிடித்துச் சென்றனர்.
இதற்கு முன் பள்ளியில் சிறிய பாம்பைக் கண்டு நாங்களே விரட்டியுள்ளோம்; ஆனால் இவ்வளவுப் பெரியப் பாம்பு பள்ளி வளாகத்தில் நுழைந்தது இது தான் முதன் முறை என ஆசிரியர் ஒருவர் கூறினார்.