
கோலாலம்பூர், டிசம்பர் 26-பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவனை அவதூறு செய்த ஃபேஸ்புக் நேரலை வீடியோவை, நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் Mohd Zaidy Abdul Kadir நீக்கியுள்ளார்.
அச்செயலுக்காக சஞ்சீவனிடம் அவர் பகிரங்க மன்னிப்பும் கேட்டுள்ளார்.
தாம் பகிர்ந்த வீடியோ, சஞ்சீவன் தொடுத்துள்ள நீதிமன்ற வழக்குடன் தொடர்புடையது என தனக்குத் தெரியாமல் போய் விட்டதாக, அந்த அம்னோ உறுப்பினர் அறிக்கையொன்றில் கூறினார்.
அவதூறு வீடியோவைப் பகிர்வது மலிவு அரசியலாகும்.
எனவே, 24 மணி நேரங்களில் Zaidy வீடியோவை நீக்கி, பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் துணைத் தலைவருமான சஞ்சீவன் முன்னதாக எச்சரித்திருந்தார்.
அந்த வீடியோவில் அரசியல் ஆர்வலர் CheguBard, சஞ்சீவனை அவதூறாகப் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அதற்கெதிராக சஞ்சீவன் தொடுத்த அவதூறு வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.



