
பெய்ஜிங், நவம்பர்-4,
சீனாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான Spring Airlines புதிய பணியாளர் அறிவிப்பால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
திருமணமான மற்றும் குழந்தைகள் உள்ள பெண்களை விமானப் பணியாளர்களாக தேர்வு செய்வதற்காக “air aunties” என்ற பெயரில் அந்நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளதே அதற்குக் காரணம்.
‘aunties’ என்ற பெயர் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலர் இதை பெண்களை வயதானவர்களாகவும், வீட்டு வேலையாட்கள் போலவும் காட்டுவதாக கண்டித்தனர்.
எனினும், Spring Airlines நிறுவனம் தனது அச்செயலைத் தற்காத்துள்ளது.
“’Aunties’ என்பது சிறுமைப்படுத்தும் பெயரல்ல என்றும், மூத்த மற்றும் குடும்ப அனுபவம் கொண்ட பெண்கள், விமானப் பயணிகளுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் தருவார்கள்” என்றும் தெளிவுப்படுத்தியது.
ஆனால் விமர்சகர்களோ, இது பாலின அடையாளங்களைப் பற்றிய பிற்போக்கான பார்வையை மீண்டும் ஊக்குவிப்பதாகக் கூறுகின்றனர்.



