
கோலாலம்பூர், அக்டோபர் 10 – உலகில் கோழி முட்டைகள் அதிகம் சாப்பிடும் நாடுகளின் பட்டியலில் மலேசியா 13ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இப்பட்டியலில் சீனா மற்றும் ஜப்பான் முன்னிலை வகிக்கும் நிலையில், ஒருவர் 16.80 கிலோகிராம் முட்டை சாப்பிடுவதாக கணக்கிடப்பட்டு, 13வது இடத்தை பிடித்திருக்கிறது, மலேசியா.
உலக மக்கள் தொகை மதிப்பாய்வு இணையத்தளத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, மலேசியாவின் மக்கள் தொகை தற்போது 32.27 மில்லியனாகும்.
இந்த எண்ணிக்கை 2068ஆம் ஆண்டில் 42.07 மில்லியனாக எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மிகவும் பிரபலமான ஊட்டச்சத்து ஆதாரங்களில் முட்டைகள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.