Latestமலேசியா

ஆசியப் பள்ளிகளுக்கான சதுரங்கப் போட்டியில் வாகை சூடினார் ஜெனிவன் கெங்கேஸ்கரன்; KLIA-வில் இன்றிரவு வீர வரவேற்பு

செப்பாங், நவம்பர்-2,

மங்கோலியா நாட்டில் நடைபெற்ற ஆசியப் பள்ளிகளுக்கான 19-ஆவது சதுரங்கப் போட்டியில், மலேசியாவின் ஜெனிவன் கெங்கேஸ்வரன் வாகை சூடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

U17 எனப்படும் 17 வயதுக்குக் கீழ்பட்ட ஆடவர் பிரிவில் அவர் வெற்றி வாகை சூடியிருப்பது, மலேசிய சதுரங்க சமூகம் மட்டுமின்றி நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளது.

மகத்தான் இவ்வெற்றியை கொண்டாடும் வகையில், இன்றிரவு நாடு திரும்பும் ஜெனிவனுக்கு வீர வரவேற்பு அளிக்கப்படவிருக்கின்றது.

11 மணிக்கு செப்பாங், KLIA டெர்மினல் 1 முனையத்தில் ஜெனிவன் வந்திறங்குவார் என என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, குடும்பத்தாரோடு, ஆசிரியர்கள், நண்பர்கள், சதுரங்க ஆர்வலர்கள், ஊடகத்தினர், பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நம் இளம் சாம்பியனுக்கு உற்சாகமான வரவேற்பை வழங்க அழைக்கப்படுகிறார்கள்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!