Latestமலேசியா

ஆசியான் தலைமை: அன்வாருக்கு தக்சின் தனிப்பட்ட ஆலோசகரா? புதுமை!; பாஸ் சாடல்

கோலாலம்பூர், டிசம்பர்-17 – அடுத்தாண்டு மலேசியா ஆசியான் தலைவராகும் போது தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவட் (Thaksin Shinawatra) தமது ‘தனிப்பட்ட ஆலோசகராக’ இருப்பார் என்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பு குறித்து, பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது, இதுவரை நடந்திராத புதுமையென அஹ்மட் ஃபட்லி ஷாரி (Ahmad Fadhli Shaari) கூறினார்.

பிரதமரின் அம்முடிவு, அரசியல் பகுத்தறிவு ரீதியாக மட்டுமல்ல, நடைமுறை சாத்தியம் மற்றும் தார்மீக ஒழுக்கம் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்றார் அவர்.

எந்த காலத்தில் ஒரு தேசியத் தலைவருக்கு இன்னொரு நாட்டின் முன்னாள் தலைவர் ஆலோசகராகத் தேவைப்பட்டார்?

வழக்கமாக ஒரு அரசத் தந்திரி, முன்னாள் வெளியுறவு அமைச்சர், அனைத்துக உறவில் நிபுணத்துவம் பெற்ற கல்விமான்கள் போன்றோர் தான் இது போன்ற பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுவர்.

ஆனால் இங்கே, ஊழல் மற்றும் அதிகார முறைகேட்டுக்காக சொந்த நாட்டில் தண்டிக்கப்பட்ட ஒரு முன்னாள் பிரதமர் ‘தனிப்பட்ட ஆலோசகராகிறார்’.

இது உண்மையிலேயே விந்தையென, அஹ்மட் ஃபாட்லி அறிக்கையொன்றில் சாடினார்.

தக்சின் போன்ற ‘அரசதந்திரிகளின்’ அனுபவம், ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியாவுக்கு பெரும் உதவியாக இருக்குமென, நேற்று புத்ராஜெயாவில் அதனை அறிவித்த போது பிரதமர் கூறியிருந்தார்.

2001 முதல் 2006 வரை தாய்லாந்துப் பிரதமராக இருந்த தக்சின், இராணுவப் புரட்சியில் வீழ்த்தப்பட்டு, 15 ஆண்டுகள் நாடு கடந்து வாழ்ந்து வந்தார்.

கடந்தாண்டு தாய்லாந்து திரும்பியவருக்கு, ஊழல் மற்றும் அதிகார முறைகேடு தொடர்பில் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்நாட்டு மன்னரால் அது ஓராண்டாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!