
கோலாலம்பூர், நவ 5 – 16 வயது சதுரங்க விளையாட்டாளரான மலேசியாவின் ஜெனிவன் கெங்கெஸ்வரன் ( Genivan Genkeswaran)மங்கோலியாவில் உலான்பதாரில் நடைபெற்ற ஆசிய பள்ளிகளுக்கிடையிலான 19 ஆவது செஸ் போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை வீழ்த்தி சாம்பியனாக வாகை சூடினார். 17 வயதுக்குட்பட்டவர்களுக்ன சதுரங்க போட்யில் முதல் இடத்தைப் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் அனைத்துலக சதுரங்க சம்மேளனத்தின் FIDE Maste ( FM ) விருதை வென்றார். இப்போட்டியில் மலேசியாவின் சார்பில் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்துகொண்ட ஷா ஆலாம் சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளி மாணவி Ashreeya Roa Sangkaran குழு பிரிவில் மூன்றாவது இடத்திற்கான பதக்கத்தைப் பெற்றார்.
முன்னதாக கேண்டிடேட் மாஸ்டர் (CM) பட்டத்தை வென்ற ஜெனிவன், ஒன்பது சுற்று நிலையான ஆட்டங்களுக்குப் பிறகு மலேசியாவின் முதலிடத்தைப் பிடித்தார். ஆசிய செஸ் கூட்டமைப்பு மற்றும் FIDE ஆகியவற்றின் கீழ் மங்கோலியா செஸ் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த சாம்பியன்ஷிப் போட்டியில், ஜெனிவன் மங்கோலியாவின் ஆல்டார் பியூரென்டெக்ஸ் ( Alder Burentegsjh ) மற்றும் ரஷ்யாவின் ஆர்டெம் மெஷ்செரியாகோவ் ( Artem MKescheryakov ) ஆகியோரை வீழ்த்தினார்.
அவர்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். ஜெனிவனின் குறிப்பிடத்தக்க சாதனை குறித்து நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். இந்த புதிய பட்டம் அவர் தனது கனவுகள் மற்றும் இலக்குகளை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேற உந்து சக்தியாக இருக்கும்.
இது ஒரு அர்த்தமுள்ள பயணத்திற்கான தொடக்கமாக இருக்கும் என்று அவரது தாயார் மற்றும் மேலாளரும், FIDE நடுவரும் சதுரங்க பயிற்சியாளருமான செல்வி சண்முகம் கூறினார். ஒரு சதுரங்க வீரராக மட்டுமல்லாமல், சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிக்கும் ஒரு தனிநபராகவும் ஜெனிவனின் தொடர்ச்சியான வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக செல்வி தெரிவித்தார்.



