ரெம்பாவ் , டிச 23 – காப்புறுதி பணத்தை பெறுவதற்காக தனது ஆடம்பர கார் திருடுபோனதாக ஆடவர் ஒருவர் புகார் செய்துள்ளதை போலீசார் கண்டறிந்தனர்.
வெள்ளிக்கிழமையன்று இரவு மணி 10.30 அளவில் இரண்டு ஆடவர்கள் தம்மிடம் கொள்ளையிட்ட பின் தனக்கு சொந்தமான பொருட்களுடன் தனது Audi காரையும் அவர்கள் ஓட்டிச் சென்றதாக 40 வயதுடைய ஆடவர் ஒருவர் புகார் செய்திருந்ததாக ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Shaik Abdul Kadir Shaik Mohamed வெளியிட்ட அறிக்கையில் தெரவித்தார்.
அந்த ஆடவரிடமிருந்து அதிகாலை மணி 3.15 அளவில் ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைமையகம் புகாரை பெற்றதைத் தொடர்ந்து தண்டனைச் சட்டத்தின் 395 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது.
தன்னை தடுத்துச் நிறுத்திய அடையாளம் தெரியாத இரு ஆடவர்கள் சில பொருட்களுடன் காரையும் ஓட்டிச் சென்றதாக கூறியிருந்ததைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் அவர் பொய்யான புகார் செய்திருந்தது தெரியவந்தது.
தண்டனைச் சட்டத்தின் 182 ஆவது விதியின் கீழ் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொய்யான போலீஸ் புகாரை செய்ய வேண்டாம் என Shaik Abdul Kadir பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.