
கிளானா ஜெயா, மார்ச்-16 – சிலாங்கூர் கிளானா ஜெயாவில் உள்ள ஆரம்பப் பள்ளியொன்றில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட 7 வயது மாணவன் துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மாணவர் மேலாண்மை உதவியாளரால் அச்சிறுவன் துன்புறுத்தப்பட்டதாக, டிக் டோக்கில் வீடியோ வைரலாகியுள்ளது.
இதையடுத்து பெட்டாலிங் ஜெயா குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளதாக, மாவட்ட போலீஸ் தலைவர் ACP Shahrulnizam Ja’afar தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவனின் தாயாரும் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2001 சிறார் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
தகவல் தெரிந்தோர் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.