
ஏப்ரல் 26 ஆம்தேதி நடைபெறவிருக்கும் பேரா ஆயர் கூனிங் (Ayer Kuning) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் தாப்பா அம்னோ செயலாளர் டாக்டர் Mohamad Yusri Bakir தேசிய முன்னணி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று தாப்பாவுக்கு அருகே Temohவில் பலநோக்கு மண்டபத்தில் அம்னோ தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi தலைமையிலான தேசிய முன்னணி தேர்தல் இயந்திரம் தொடக்கிவைக்கப்பட்ட நிகழ்வில் மாநில தேசிய முன்னணி தலைவரும் பேரா மந்திரிபுசாருமான டத்தோஸ்ரீ சராணி முகமட் (Datuk Seri Saarani Mohamad) இதனைத் தெரிவித்தார்.
தாப்பா நாடாளுமன்ற தொகுதியின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரின்பின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் , தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் , ம.சீ.ச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங், ம.சீ.ச துணைத் தலைவர் டத்தோ டாக்டர் மா ஹங் சூன், பி.கே.ஆர் உதவித் தலைவர் நுருல் இசா அன்வார், தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதிர், அமனா கட்சியின் தலைவர் முகமட் சாபு, DAP ஆலோசகர் டத்தோ Ngeh Koo Ham ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். முகமட் யுஸ்ரி சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கல்வித்துறையில் PhD பட்டம் பெற்றவர் ஆவார். அவர் தற்போது ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் இஸ்லாமிய மற்றும் நன்னெறி துறையின் தலைவராக இருந்து வருகிறார்.
பிப்ரவரி 22 ஆம்தேதி சட்டமன்ற உறுப்பினர் Isham Shahruddin காலமானதைத் தொடர்ந்து ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.