Latestமலேசியா

ஆளுக்கு RM100; கிளேபாங் கடற்கரையில் ‘பாரி வள்ளல்’ வர்த்தகரின் ‘தாராளம்’; வைரலாகும் வீடியோ

கிளேபாங், டிசம்பர்-10 – மலாக்காவில் உள்ள கிளேபாங் கடற்கரையில் “லட்சாதிபதி” என அழைக்கப்படும் வர்த்தகர் ஒருவர், பொது மக்களுக்கு ஆளுக்கு RM100 நோட்டை வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

 

கடற்கரைக்கு வந்திருந்த மக்கள், யாரென்றே தெரியாத அந்நபர் திடீரென பணம் வழங்கியது கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

 

இதனால் நீண்ட வரிசையையும் பார்க்க முடிந்தது.

 

பலர் அந்த தருணத்தை வீடியோவாக பதிவுச் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், சம்பவம் வைரலாகியுள்ளது.

 

பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த ஹுலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் Mohd Sany Hamzan-னும் அந்த வர்த்தகருடன் வருவது வீடியோவில் தெரிகிறது.

 

பணம் வழங்கியவர் Datuk Salim Abdul Rahman எனும் வர்த்தகர் என சில ஊடகங்கள் கூறியுள்ள போதும், அந்நபரின் உண்மையான அடையாளம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

 

ஆனால் அவரின் செயல் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

சிலர் அவரின் தாராள குணத்தைப் பாராட்டிய வேளை, சிலர் அவரின் நோக்கம் என்னவாக இருக்குமென கேள்வி எழுப்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!