
கோலாலம்பூர், டிச 18 – இதுவரை மொத்தம் 5.6 மில்லியன் மக்கள் மாதாந்திர அடிப்படையிலான ( Sumbangan Asas Rahmah ) எனப்படும் (SARA) பங்களிப்பை பெற்றுள்ளனர்.
2025 ஆம் ஆண்டிற்கான மொத்த தகுதி 5 பில்லியன் ரிங்கிட்டாக எட்டியுள்ளது என்று இரண்டாவது நிதியமைச்சர், டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் ( Amir Hamzah Azizan) தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட புதிய முறையீடுகள் உட்பட நேற்றுவரை கிட்டத்தட்ட 5.6 மில்லியன் SARA பெறுநர்கள் பதிவு செய்யப்பட்ட வர்த்தக வளாகத்தில் அடிப்படை பொருட்களை வாங்க MyKad டைப் பயன்படுத்தியுள்ளனர்.
இது 99 விழுக்காடு பயன்பாட்டு விகிதத்தையும் மொத்த செலவு 4.59 பில்லியன் ரிங்கிட்டையும் பிரதிபலிக்கிறது.
‘ஒரு முறை’மட்டுமே வழங்கப்பட்ட SARA உதவித் தொகையை
22 மில்லியனுக்கும் மேற்பட்ட பெரியோர்களில் 20 மில்லியனுக்கும் அதிகமான பெறுநர்கள் 1.91 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேலாக செலவிட்டுள்ளனர் என இன்று மேலவையில் வாய்மொழி கேள்வி பதில் அமர்வின் போது அமிர் ஹம்சா விவரித்தார்.
SARA உதவிக்காக MyKad தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் இல்லாமல் இலக்கு மானியங்களை செயல்படுத்துவதை உறுதி செய்வதில் நிதி அமைச்சின் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து செனட்டர் முகமட் ஹஸ்பி மூடாவின் ( Mohd Hasbie Muda) வின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.



