Latestமலேசியா

இந்தியச் சமூகத்திற்கான சிறப்பு முன்னெடுப்புகள் வாயிலாக 11,443 தொழில்முனைவோர் பயன்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-24 – தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சான KUSKOP-ப்பின் கீழ், இதுவரை 11,443 இந்தியத் தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.

ஏராளமான சிறப்பு முன்னெடுப்புகள் வாயிலாக அவர்களுக்கு 198.94 மில்லியன் ரிங்கிட் நிதி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக, துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டு வரும் மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்டத் திட்டங்கள் மூலம், முந்தைய அரசாங்கங்களை விட இந்த மடானி அரசாங்கம் இந்தியர்கள் மீது அதிக அக்கறைக் கொண்டுள்ளது நிரூபணம் ஆகியிருப்பதாக ரமணன் சொன்னார்.

எனவே, பேங்க் ராக்யாட் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி, வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ளுமாறு இந்தியத் தொழில்முனைவோரை அவர் கேட்டுக் கொண்டார்.

பேங்க் ராக்யாட்டின் BRIEF-i கடனுதவித் திட்டம் தொடர்பில் கூட்டரசு பிரதேச அளவில் 300-க்கும் மேற்பட்ட இந்தியத் தொழில்முனைவோருக்கு நடத்தப்பட்ட விளக்கமளிப்புக் கூட்டத்தில் ரமணன் பேசினார்.

இதற்கு முன் பினாங்கு மற்றும் பேராக்கில் நடத்தப்பட்ட ‘வணக்கம் மடானி’ திட்ட விளக்கமளிப்பின் தொடர்ச்சியாக இந்நிகழ்வு நடைபெற்றது.

ஜூலை 31 வரை BRIEF-i திட்டத்தின் கீழ் 52.72 மில்லியன் ரிங்கிட் கடனுதவி அங்கீகரிக்கப்பட்டு, 577 இந்தியத் தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.

அவர்களில் 482 பேர் குறு தொழில்முனைவோர், 95 பேர் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் என்றும் ரமணன் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!