
கோலாலம்பூர், ஜனவரி-29-இந்தியத் தொழில் முனைவோர் கடனுதவித் திட்டமான SPUMI-க்கு அரசாங்கம் இவ்வாண்டு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்தாண்டு 30 மில்லியன் ரிங்கிட்டே ஒதுக்கப்பட்ட நிலையில், 2026-ல் அது உயர்த்தப்பட்டுள்ளதாக KUSKOP எனப்படும் தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
இந்நடவடிக்கை அமைச்சின் ABCD திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இதன் நோக்கம் இந்தியச் சமூகத்தின் தொழில் சூழலை வலுப்படுத்துவதாகும் என்றார் அவர்.
இதுவரை நாடு முழுவதும் 136 இந்தியத் தொழில் முனைவோர் இந்த திட்டத்தின் மூலம் 4 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பெற்றுள்ளனர்.
இதனிடையே, பினாங்கு தைப்பூசத்தை முன்னிட்டு பிப்ரவரி 1-ஆம் தேதி 200 Wira KUSKOP தன்னார்வலர்கள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் சமூக சேவைகளில் ஈடுபடவும் பணியமர்த்தப்படவுள்ளதாகவும் சிம் சொன்னார்.



