Latest

இந்தியர்களுக்கான reach out திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் – இயோ பீ யின் வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச்-13 – மக்கள் நலத் திட்டங்கள் குறித்த reach out முன்னெடுப்புகள் இந்தியர்களுக்கு அதிகரிக்கப்பட வேண்டும்.

அதுவும் தமிழிலேயே அவை நடத்தப்பட வேண்டும்; அப்போது தான் தகவல்கள் அவர்களைச் சென்றடையுமென, பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் Yeo Bee Yin கூறுகிறார்.

இந்த reach out திட்டங்கள் ஒருகுறை தீர்க்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற களமாகவும் அமையுமென வணக்கம் மலேசியாவிடம் அவர் தெரிவித்தார்.

அதன் காரணமாகத்தான், பூச்சோங் MP ஆனதிலிருந்து மக்களின் அடிப்படை வசதிக் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் வழங்கி வந்த தாம், இவ்வாண்டு மனித மூலதன மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு திறன் தேர்ச்சிப் பயிற்சிகள் பெறுவதும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு, தொகுதி வாழ் இந்தியர்களுக்கு AI பயிற்சியையும் இவர் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தியர்கள் மட்டுமல்லாமால் அனைவருமே தங்களது வாழ்க்கையில் முன்னேற கல்வியறிவும் திறனும் அத்தியாவசியமாகும் என்றார் அவர்.

பூச்சோங் வாழ் இந்தியர்களுக்கான அவரது திட்டங்களை கேட்ட போது, கோயில்களைத் தரமுயர்த்துவது குறிப்பாக வெறும் வழிபாட்டுத்தலமாக இல்லாமல், சமூக நடவடிக்கை மையமாக செயல்பட வேண்டும் என்பதே தனது இலக்கு என Yeo Bee Yin கூறினார்.

இவ்வேளையில், எந்த அரசாங்கமாக இருந்தாலும் இந்தியர்களை உரிய முறையில் கவனிப்பதில்லை என்ற அதிருப்தியை தம்மால் புரிந்துகொள்ள முடிவதாக Yeo Bee Yin சொன்னார்..

என்றாலும், இந்த மடானி அரசாங்கம் இந்தியர்கள் உட்பட அனைவரையும் அரவணைத்துச் செல்ல மனதார உழைக்கிறது.

எனவே, இந்தியர்களின் மனக்குறைகளைப் புரிந்து, அவற்றைப் போக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட, அரசாங்கத்துக்கு சற்று கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென Yeo Bee Yin கேட்டுக் கொண்டார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கடி சொல்வது போல, இந்தியர்களும் அரசாங்கத்தின் பிள்ளைகளே என Yeo Bee Yin வணக்கம் மலேசியாவுடனான தனது சிறப்புப் பேட்டியை முடித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!