
ரோம், ஜூலை-26- வட இத்தாலியில் சிறிய இரக விமானமொன்று நெடுஞ்சாலையில் விழுந்து வெடித்துச் சிதறியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
வேகமாக வந்த விமானம் செங்குத்தாக நெடுஞ்சாலையில் விழுவதும், பெரும் வெடிப்புச் சத்ததுடன் தீ பரவுவதும் வைரலாகியுள்ள வீடியோக்களில் தெரிகின்றன.
அவ்வெடிப்பினால் நெடுஞ்சாலையில் 2 வாகனமோட்டிகள் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
மரணமடைந்தது, 75 வயது விமானியும் அவரின் 60 வயது காதலியும் என தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, நெடுஞ்சாலையில் அவசரத் தரையிறக்கத்திற்கு விமானி முயற்சி செய்திருக்கக் கூடும்.
ஆனால் கட்டுப்பாட்டை இழந்து விமானம் தரையில் மோதியதாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
என்றாலும் விமானத்தின் பராமரிப்பு வரலாறு, இயந்திர நிலைமைகள் போன்றவை குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.