
கோலாலம்பூர், அக் 24 – பல்கலைக்கழகங்களில் இணையும் இந்திய மாணவர்களுக்கான ஆண்டு ஒதுக்கீடாக 100 மில்லயன் ரிங்கிட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய கல்வி நிதியை அமைக்கும்படி பாங்கி பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்சன் ஜோஹான் ( Syahredzan Johan ) கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய சமூகத்திற்கு பல நிதி உதவிகள் உள்ளன, எடுத்துக்காட்டாக மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான (மித்ரா)வின் கீழ் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் புதிய மாணவர்களுக்கு 2,000 ரிங்கிட் மானியம் வழங்கப்படுகிறது. இது மிகவும் சிறிய தொகையாக இருப்பதால் ஒரு நல்ல மடிக் கணினி வாங்குவதற்குகூட போதுமானதாக இருக்காது என இன்று நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டுக்கான விநியோக மசோத மீதான விவாதத்தில் கலந்துகொண்டபோது ஷாரெட்சன்
சுட்டிக்காட்டினார்.
உத்தேச இந்திய சமூக கல்வி நிதியின் கீழ் இந்திய மாணவர்கள் தங்களது
கல்வி செலவுக்கு ஒரு முறை மட்டும் 20,000 ரிஙகிட் பெறுவதற்கு தகுதி
பெறமுடியும். இதற்காக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கும்படி தாம் ஆலோசனை தெரிவிப்பதாகவும் இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 5,000 மலேசியர்கள் உதவி பெறமுடியும் என அவர் வலியுறுத்தினார்.