சான் ஃபிரான்சிஸ்கோ, டிசம்பர்-23 – ஜனவரியில் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப், AI அதிநவீனத் தொழில்நுட்பத்திற்கான வெள்ளை மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீ ராம் கிருஷ்ணனை நியமித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தில் AI தொழில் நுட்பத் துறையின் ஆலோசகரான David O.Sacks என்பவருடன் ஸ்ரீ ராம் இணைந்துப் பணியாற்றுவார்.
ஸ்ரீ ராம், AI-யில் அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதை உறுதிச் செய்வதில் கவனம் செலுத்துவார் என டிரம்ப் கூறினார்.
அறிவியல் தொழில் நுட்பத்திற்கான அதிபரின் ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது, AI கொள்கை வடிவமைப்பில் ஈடுபடுவது, ஒருங்கிணைப்பதும் அவரின் பணியாகும்.
ஸ்ரீ ராம் கிருஷ்ணன், Microsoft, Twitter, Yahoo, Facebook, Snap போன்ற பல்வேறு தொழில் நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களில் பணியாற்றியவர் ஆவார்.
இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தில் இணைந்து நாட்டுக்குச் சேவையாற்றவிருப்பது பெருமையாக இருப்பதாக ஸ்ரீ ராம் தனது X தளத்தில் வருணித்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை தொடர்ந்து முன்னிலைப்படுத்த பங்காற்றவும் அவர் உறுதிபூண்டார்.