Latestமலேசியா

இன்ஸ்தாகிராமில் பிரபலமான விமான நிலையங்கள் வரிசையில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தைப் பின்னுக்குத் தள்ளிய KLIA

கோலாலம்பூர், அக்டோபர்-3 – Instagram-மில் மிகவும் பிரபலமான விமான நிலையங்களுக்கான தர வரிசையில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை முந்தி KLIA கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 

உலகின் மிகவும் பரபரப்பான 50 விமான நிலையங்களுடன் தொடர்புடைய instagram hashtags-களை அடிப்படையாகக் கொண்டு வான் போக்குவரத்து இணையத்தளமான Simple Flying அப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

6 லட்சத்திற்கும் மேற்பட்ட hashtags-களுடன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் நான்காவது இடத்திலும், உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படும் Changi Airport ஐந்தாமிடத்திலும் உள்ளன.

நவீன அம்சங்கள் மற்றும் இயற்கை கூறுகளின் கலவையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் தனித்துவமான வடிவமைப்பு, பயணிகள் மற்றும் Instagram பயனர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

அதோடு, அதன் பசுமையான உட்புறம், குறிப்பாக Jungle Boardwalk எனப்படும் வனச்சூழலிலான நடைபாதை, மற்ற விமான நிலையங்களிலிருந்து வேறுபட்டு நிற்கும் தனித்துவமான காட்சி அனுபவத்தை வழங்குவதாக Simple Flying கூறுகிறது.

2014-ல் Terminal 2 திறக்கப்பட்டது, புதிய செயற்கைக் கோள் முனையத்தின் விரிவாக்கம் என அண்மைய சில ஆண்டுகளில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் வளர்ச்சியையும் கண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்பட்டியலில் முதலிடத்தை லாஸ் ஏஞ்சலஸ் அனைத்துலக விமான நிலையமும், இரண்டாமிடத்தை சான் ஃபிரான்சிஸ்கோ அனைத்துலக விமான நிலையமும், மூன்றாமிடத்தை லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையமும் பிடித்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!