
கோலாலம்பூர், நவம்பர் 8 – அரசு பணியாளர்களின் கடமையை தடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ வழக்கில், விசாரணை முடிந்து, அதன் கோப்பு (investigation paper) விரைவில் அரசு வழக்குத்துறை இயக்குனர் அலுவலகத்தில் (DPP) ஒப்படைக்கப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சஸ் (Datuk Fadil Marsus) தெரிவித்துள்ளார்.
போலீஸ் அரசு அதிகாரியின் கடமையைத் தடை செய்தல் என்ற குற்றச்சாட்டிற்கு கீழ், வழக்கு தொடர பரிந்துரைப்பதோடு, அந்நடவடிக்கை மிக விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் சம்பவம் தொடர்பான பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அதுகுறித்து பாடில் பேசுகையில், ஊடகங்கள் உண்மையை மட்டுமே வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் சமூக ஊடகங்களும் அதிகாரிகளும் தங்கள் பங்கை நேர்மையாகச் செய்தால், நீதி நிலைநாட்டப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.



