
டோக்கியோ, செப்டம்பர் 5 – ஏமாற்றுபவர்களின் அட்டூழியங்கள் பெருகி வரும் அதே வேளை, இப்படியும் ஒரு மனிதன் ஏமாறலாமா என்பதற்கிணங்க ஜப்பான் டோக்கியோவில் 80 வயது மூதாட்டி ஒருவர், தனது வாழ்நாள் மொத்த சேமிப்பையும் “விண்வெளி வீரர்” போல நடித்தவரிடம் ஒப்படைத்து விட்டு ஏமாந்துள்ள சம்பவம் உண்மையிலேயே பெரும் வேடிக்கையாய் உள்ளது.
அம்மூதாட்டிக்கு சமூக ஊடகத்தில் அறிமுகமான நபர், தன்னை விண்கலத்தில் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர் என்றும், ஆக்ஸிஜன் வாங்க பணம் தேவைப்படுவதாகவும் கூறி அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், சுமார் 6,700 அமெரிக்க டாலரை அனுப்பிய பின்புதான், தான் மோசடியில் சிக்கியிருப்பதையே உணர்ந்திருக்கின்றார்.
உள்ளூர் போலீசார் இவ்வழக்கை தீர விசாரித்து வருகின்ற நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்தகைய மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.