
குளுவாங், பிப்ரவரி-28 – பெரிய இலாபம் பார்க்கலாம் என்ற ஆசையை வார்த்தையை நம்பி, இல்லாத ஓர் இணைய முதலீட்டுத் திட்டத்தில் 562,000 ரிங்கிட்டை பறிகொடுத்து நிற்கிறார் ஜோகூர் குளுவாங்கைச் சேர்ந்த 80 வயது முதியவர்.
கடந்தாண்டு செப்டம்பரில் ஒரு facebook விளம்பரத்தால் அவர் கவரப்பட்டுள்ளார்.
பிறகு, அறிமுகமில்லாத ஒருவருடன் WhatsApp-பில் தொடர்பு கிடைத்து, கொடுக்கப்பட்ட இணைய அகப்பக்கத்தில் முதலீட்டுக்காக பதிந்தும் கொண்டார்.
இரட்டிப்பு இலாபம் வருமென நம்பி, கடந்த செப்டம்பர் முதல் இம்மாதத் தொடக்கம் வரை, 3 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 8 தடவையாக 562,000 ரிங்கிட்டை முதியவர் மாற்றியுள்ளார்.
ஆனால், சொல்லியபடி இலாபத் தொகை வரவில்லை; WhatsApp-பில் பேசியவர்களும் மாயமாகி விட்டனர்; பதிந்திருந்த அகப்பக்கத்திலும் நுழைய முடியவில்லை.
இதையடுத்தே, தாம் மோசடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து அம்முதியவர் குளுவாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.