Latestமலேசியா

இஸ்மனிராவின் தண்டனையை ஒத்திவைக்கும்படி செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்தது

ஷா அலாம், டிச 23 – அக்டோபர் 31 ஆம் தேதி தனது மகனைப் புறக்கணித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, மறைந்த ஜெய்ன் ரயான் அப்துல் மதீனின் ( Zayan Rayyan ) தாயாருக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை ஷா அலாம் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

விண்ணப்பத்தை வழங்க அனுமதிக்கும் சிறப்பு சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , குற்றம் சாட்டப்பட்ட இஸ்மானிரா அப்துல் மனாப்பின் ( Ismanira Abdul Manaf ) மனுவை நீதிபதி டத்தோ அஸ்லம் ஜைனுதீன் ( Aslam Zainuddin) தள்ளுபடி செய்தார்.

தனது மகனைப் புறக்கணித்ததற்காக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு நவம்பர் 19 ஆம் தேதி இஸ்மானிரா விண்ணப்பித்தார்.

30 வயதான இஸ்மானிரா, தனது மகனை புறக்கணித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட தனது மகன் ஜெய்ன் ராயன் உடல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகும் அளவிற்கு அவனைப் புறக்கணித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இஸ்மனிராவுக்கு சிறைத் தண்டனனை விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!