Latestமலேசியா

ஈப்போவில் கட்டுமானத்தள குளத்தில் மூழ்கி 8,9 வயதான இரு சகோதரர்கள் மரணம்

ஈப்போ, ஆகஸ்ட்-22 – ஈப்போ, தாமான் செமோர் ரியாவில் (Chemor Ria) உள்ள வேலி இல்லாத கட்டுமானத் தளத்தில், 8 மற்றும் 9 வயதான இரு சகோதரர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

புதன்கிழமை மாலை வீட்டுக்கு அருகே விளையாடச் சென்ற அவர்கள், பின்னர் குளத்தில் மயக்க நிலையில் பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இருவரும் உடனே ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், இரவு 9.30க்கு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

மூழ்கியதே மரணத்திற்குக் காரணம் என
சவப்பரிசோதனையில்
உறுதிச் செய்யப்பட்டது.

சம்பவ இடத்தில் வேலி அல்லது எச்சரிக்கை பலகைகள் எதுவும் இல்லை.

இதையடுத்து இச்சம்பவம், கவனக்குறைவு என வகைப்படுத்தப்பட்டு 2001 குழந்தைகள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதி, பெற்றோர்கள் ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அபிவிருத்தியாளர்கள் மற்றும் கட்டுமானக் குத்தகைக்காரர்கள் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!