
ஈப்போ, மார்ச்-13 – ஈப்போ, கம்போங் கெப்பாயாங், தாமான் பூலாய் ஹைட்ஸில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீட்டை விட்டு வெளியே சென்ற 62 வயது தினகரன் ரத்னம் என்பவர் காணாமல் போயிருக்கின்றார்.
KDQ 1116 என்ற கார் பதிவு எண் பட்டை கொண்ட கருநீல Honda Accord காரில் ஃபிசியோ மையத்திற்குச் செல்வதாகக் கூறியவர், இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தார் கூறினர்.
கடைசியாக பழுப்பு நிற காலர் சட்டையும் முட்டி வரையிலான சாக்லெட் நிற அரைக்கால் சிலுவாரும் அணிந்திருந்தார்.
கைப்பேசியையும் அவர் வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளார்; எனவே தொடர்புக் கொள்வதும் சாத்தியமில்லாமல் போயிருக்கிறது.
172 சென்டி மீட்டர் உயரமும், 58 கிலோ கிராம் எடையும் கொண்ட தினகரன் நீரிழிவு நோயாளி என்பதுடன், நரம்பியல் பிரச்னையால் நடப்பதற்கும் சிரமப்படுபவர்.
இந்நிலையில் அவர் காணாமல் போயிருப்பது குடும்பத்தாருக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ரேலா தொண்டூழியப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஈப்போ முதல் பினாங்கு வரை குழுக்களை அனுப்பி அவர்கள் தேடி வருகின்றனர்.
போலீஸிலும் புகாரளிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தாரும் கோப்பேங் முதல் தைப்பிங் வரை எல்லா இடத்திலும் தேடி வருகின்றனர்.
எனவே தினகரனை வெளியில் எங்கும் பார்த்தாலோ அல்லது அவர் இருக்குமிடம் தெரிந்தாலோ, தங்களைத் தொடர்புக் கொள்ளுமாறு, அவரின் குடும்பத்தார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தொடர்புக் கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் 017-7869280 அல்லது 012-7247845.