
ஈப்போ, ஏப்ரல்-8- பேராக், ஈப்போ, ஜெலாப்பாங்கில், பேஸ்பால் மட்டை, பாராங், சமுராய் வாள், கத்தி, ஹெல்மட் சகிதமாக கலவரத்தில் இறங்கிய 9 பேர் கைதாகியுள்ளனர்.
19 முதல் 41 வயதிலான சந்தேக நபர்கள் வெவ்வேறு இடங்களில் கைதானதாக, ஈப்போ போலீஸ் தலைவர் அபாங் சைனால் அபிடின் அபாங் அஹ்மாட் கூறினார்.
அவர்களில் இருவர் பழையக் குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்தனர்; நால்வர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தனர்.
ஓர் ஆடம்பர கார், ஒரு கோல்ஃப் கிளப் ஆகியவற்றையும் போலீஸ் பறிமுதல் செய்தது.
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் தொடர்பில் எழுந்த கருத்து வேறுபாடே அச்சண்டைக்குக் காரணம் என தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
கலவரத்தில் அறுவர் காயமடைந்து வெளிநோயாளிகளாக சிகிச்சைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.