Latestமலேசியா

உடல் நலம் பாதிக்கப்பட்ட கலைஞர் சத்தியாவை நேரில் சந்தித்து உதவி வழங்கினார் செனட்டர் சிவராஜ்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-12- அண்மையக் காலமாக உடல் நலிவுற்றிருக்கும் மூத்த நகைச்சுவைக் கலைஞர் சத்தியாவை, செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் இன்று நேரில் சென்று கண்டு நலம் விசாரித்தார்.

அவருடன் மற்றொரு கலைஞரும் படத் தயாரிப்பாளருமான டெனிஸ் குமாரும் உடன் சென்றார்.

சத்தியாவின் தற்போதைய உடல் நலம் குறித்து விசாரித்த சிவராஜ், தன்னால் இயன்ற சிறு நிதியுதவியும் வழங்கினார்.

Pi Mai Pi Mai Tang Tu தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் காலத்திலிருந்து நம்மையெல்லாம் சிரிக்க வைத்து வரும் சத்தியா, உடல்நலம் தேறி பழையபடி சுறுசுறுப்பாக இயங்க பிராத்திப்பதாக சிவராஜ் சொன்னார்.

ஏற்கனவே சிறிய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த சத்யாவுக்கு, நீரிழிவு நோய் காரணமாக அண்மையில் இடது காலில் சில விரல்கள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!