உத்தரப் பிரதேசம், டிசம்பர் 24 – உத்தரப் பிரதேச மாநிலத்தில், ‘புஷ்பா 2’ திரைப்படத்தைப் பார்ப்பதற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் காதலி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குவாதத்தின் போது திடீரென ஹோட்டலின் 3ஆவது மாடியிலிருந்து காதலி குதித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த காதலி, மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கிறார்.
இந்நிலையில், காதலனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.