Latestமலேசியா

உயர்க்கல்வி கழகங்களுக்கான UPU Online விண்ணப்பங்கள் திங்கட்கிழமை திறக்கப்படும்

புத்ரா ஜெயா, பிப் 6 – 2025 /2026  கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான அடிப்படை, சான்றிதழ், டிப்ளோமா மற்றும்  இளங்கலை பட்டப் படிப்புக்கான   UPUOnline   மூலம் முதல் கட்ட விண்ணப்பங்கள்  பிப்ரவரி  10 ஆம் தேதி  தொடங்கி மார்ச்  14 ஆம் தேதிவரை  திறக்கப்பட்டிருக்கும். 

உயர்க்கல்வி நிலையங்களுக்கான இரண்டாவது கட்ட  online   விண்ணப்பங்கள்  ஏப்ரல் 14ஆம் தேதி முதல் மே 18தேதிவரை  திறக்கப்பட்டிருக்கும். 

20 பொதுப் பல்கலைக்கழகங்கள் , 36  தொழிற்நுட்ப கல்லூரிகள்,  106 சமூகக் கல்லூரிகள் மற்றும்  மாரா நிறுவனங்களின் இரண்டு உயர்க்கல்வி  கழகங்களில் இணைவதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. 

 SPM மற்றும் STPM அல்லது அதற்கு இணையான  கல்வித் தகுதியைக் கொண்ட மாணவர்களுக்கான அனைத்து கல்வித்  திட்டங்களுக்கும் முதல்கட்ட  விண்ணப்பங்கள் திறந்திருக்கும்.  

 நேரடி சந்திப்பு அல்லாத மற்றும்  சோதனைகள் இல்லாத  கல்வித் திட்டத்திற்கு இரண்டாவது கட்ட விண்ணப்பங்கள் திறக்கப்படும் .  

அனைத்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களும் உயர்கல்வியை தொடர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.  SPM  கல்வி தகுதியை கொண்ட மாணவர்ளுக்கு   மொத்தம் 350  கல்வித் திட்டங்களுக்கும் மற்றும்    STPM கல்வித் தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியை கொண்டவர்களுக்கு  பொது பல்கலைக்கழகங்கள் ,  தொழிற்நுட்பக் கல்லூரிகள்  மற்றும் மார உயர்க்கல்விக் கழகங்கள், சமூக கல்லூரிகள் வழங்கும்  1,131 கல்வித்  திட்டங்களுக்கு   விண்ணப்பிக்க முடியும் என உயர்க்கல்வி அமைச்சு வெளியிட்ட   அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!