Latestமலேசியா

உலகப் பொருளாதார ஆய்வரங்கில் கவனம் ஈர்த்த மடானி ‘மந்திரம்’; பிரதமரின் தலைமைத்துவத்திற்கு அங்கீகாரம்

கோலாலம்பூர், ஜனவரி-27, சுவிட்சர்லாந்தின் டாவோசில் அண்மையில் நடைபெற்ற உலகப் பொருளாதார ஆய்வரங்கு, மற்ற நாடுகளுக்கு எப்படியோ தெரியாது…ஆனால் மலேசியாவுக்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவம் உலக நாடுகளால் கூர்ந்து கவனிக்கப்படும் அளவுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஏழை மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அவர் கொண்ட கடப்பாடும் உறுதியும் அந்த உலக அரங்கில் எதிரொலித்தது.

குறுங்கடன் திட்டமான அமானா இக்தியார் மலேசியாவின் சிறப்பை, வங்காளதேச அரசாங்கத்தின் இடைக்காலத் தலைவர் பேராசிரியர் Dr Mohamad Yunus, டாவோசில் எடுத்துரைத்ததே அதற்கு சான்று.

Mohamad Yunus வங்காளதேசத்தில் கிராமீன் வங்கியின் (Grameen Bank) மூலம் இந்த குறுங்கடனை அறிமுகப்படுத்தி ஆயிரக்கணக்கானோரை பரம ஏழ்மை நிலையிலிலிருந்து மீட்டவராவார்.

1987-ஆம் ஆண்டு அன்வார் கல்வி அமைச்சராக இருந்த போது அதே கிராமீன் வங்கி திட்டத்தில் உதித்தது தான் இந்த அமானா இக்தியார் மலேசியா ஆகும்.

சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பே ஏழை மக்களைப் பற்றி அவர் யோசித்துள்ளார்.

ஆக, Membangun Negara MADANI என்ற புத்தகத்தில் டத்தோ ஸ்ரீ அன்வார் சுட்டிக் காட்டியது போன்று, இந்த மடானி தாரக மந்திரமானது அவரின் 40 ஆண்டு பொது வாழ்க்கை மற்றும் மக்கள் பணியின் அனுபவத்தில் வந்ததாகும்.

மடானி என்பது வெறும் சுலோகம் அல்ல; மாறாக மலேசியத் தாய் திருநாட்டின் மீது அன்வார் என்ற போராளி வைத்துள்ள பாசம் மற்றும் விசுவாசத்தின் வெளிப்பாடாகும் என, IDE ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் Amidi bin Abdul Manan வருணித்தார்.

இவ்வேளையில், 2025-ஆம் ஆண்டுக்கான ஆசியான் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையிலும், பிரதமரின் பேச்சு டாவோசில் முக்கியத்துவம் பெற்றது.

ஆசியான் வட்டாரத்தின் பொருளாதார வளர்ச்சியானது மக்களை மையப்படுத்தியதாகவும், சுற்றுச்சூழல் உணர்வுடனும் இருக்க வேண்டும் என்ற கொள்கையை அன்வார் உரக்கப் பதிவுச் செய்தார்.

ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால், அன்வாரின் 40 ஆண்டு கால அனுபவம் அதற்கு நிச்சயம் கை கொடுக்கும் என்கிறார்,
ISIS எனப்படும் வியூக மற்றும் அனைத்துலக ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ Dr Mohd Faiz Abdullah.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!