Latestமலேசியா

உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ் தரவரிசை ; மலேசியா 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டது, சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடம்

கோலாலம்பூர், ஜூலை 24 – உலகளாவிய சக்தி வாய்ந்த கடப்பிதழ் குறியீட்டில், மலேசியா 12-வது இடத்தை பிடித்துள்ளது.

மலேசிய கடப்பிதழை வைத்திருப்பவர்கள், உலகம் முழுவதும் உள்ள 227 இடங்களில், 182 இடங்களுக்கு விசா பயண அனுமதி இன்றி சென்று வரலாம்.

199 கடப்பிதழ்கள் மற்றும் 227 பயண இடங்களை மதிப்பீட்டில் எடுத்துக் கொண்ட ஹென்லி பாஸ்போர்ட் (Henley Passport Index) குறியீட்டின் படி, கடந்தாண்டு 11-வது இடத்தில் இருந்த மலேசிய கடப்பிதழ், இவ்வாண்டு தரவரிசையில் ஒரு நிலை சரிந்து 12-வது இடத்தில் உள்ளது.

அதோடு, 2014-ஆம் ஆண்டு, எட்டாவது இடத்தில் உச்ச தரவரிசையில் இருந்த மலேசிய கடப்பிதழ் தொடர் சரிவை எதிர்நோக்கியுள்ளதையும் அது குறிக்கிறது.

இந்நிலையில், உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ் தரவரிசையில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் கடப்பிதழை வைத்திருப்பவர்கள், 195 இடங்களுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.

புருனை 19-வது இடத்தில் உள்ள வேளை ; தாய்லாந்து 60-வது இடத்தையும், இந்தோனேசியா 65-வது இடத்தையும் பிடித்துள்ளன.

பிலிப்பீன்ஸ், கம்போடியா, வியட்நாம், லாவோஸ், மியன்மார் ஆகிய நாடுகள் முறையே 73,86,88,90 மற்றும் 92-வது இடங்களை வகிக்கின்றன.

உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழை வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில், ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்த ஜப்பான், 192 இடங்களுடன் ஒரு படி பின்னுக்கு தள்ளப்பட்டு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!