Latestமலேசியா

உலு திராம் போலீஸ் நிலையத் தாக்குதல்காரனின் தந்தை மீதும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், அக்டோபர்-23,

மே மாதம் ஜோகூர் உலு திராம் போலீஸ் நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஆடவனின் தந்தை, இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

பயங்கரவாத சிந்தாந்தத்தை விதைத்தது, Daesh பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவளித்தது, அக்கும்பலுடன் தொடர்புடைய சுடும் ஆயுதங்களை வைத்திருந்தது என, 62 வயது Radin Imran Radin Mohd Yassin மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும் அம்மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்து அவர் விசாரணைக் கோரினார்.

முதல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறையும் அபராதமும், எஞ்சிய 2 குற்றங்களுக்கு வாழ்நாள் சிறை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறை விதிக்கப்படலாம்.

இவ்வேளையில் அதே நீதிமன்றத்தில், அவரின் 23 வயது மகள் Farhah Sobrina மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் கீழ் தகவல்களை தர மறுத்ததன் பேரில் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்.

மே 17-ஆம் தேதி உலு திராம் போலீஸ் நிலையத்தில் புகுந்த ஓர் ஆடவன், 2 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றதோடு இன்னொருவரைக் காயப்படுத்தினான்.

பின்னர் அவனை போலீஸ் சுட்டுக் கொன்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!