Latest

எதிர்திசையில் சென்ற மோட்டார் சைக்கிளோட்டி மீது மோதிய விபத்து – ஆடவர் மரணம்

மலாக்கா, அக் 9 –

மலாக்கா, சுங்கை ஊஜாங் சிறைச்சாலையின் போக்குவரத்து விளக்குகள் அருகே ஜாலான் சுங்கை ஊஜாங்கில் நேற்றிரவு ஒரே சாலையில் எதிர்திசையில் சென்ற மோட்டார் சைக்கிளோட்டியை மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி மோதிய விபத்தில் மலாக்கா பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார்.

இரவு மணி 7.50க்கு நடந்த இந்த விபத்தில் தலையில் கடுமையாக காயம் அடைந்த 44 வயதுடைய முகமட் உசைய்மி அப்துல் ஹமிட் ( Mohd Huzaimi Abdul Hamid ) சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் கிறிஸ்தோபர் பாடிட் ( Christoper Patit ) தெரிவித்தார்.

Taman Bertam Setia விலுள்ள தனது வீட்டிலிருந்து Sungai Udang பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு மையத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் Mohamad Huzaimi மரணம் அடைந்தார்.

மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 21 வயதுடைய முகமட் அரிப் பர்ஹான் நவாவி ( Muhamad Arif Fahan Nawawi ) தலையில் காயம் அடைந்ததால் மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 (1) விதியின் கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!