Latestமலேசியா

எழுத்தாளர் பாவை பெற்ற விருது ; மலேசிய தேசிய ஆவண காப்பகத்தில் அங்கீகாரம்

கோலாலம்பூர். டிச, 11 – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் திருமதி பாவை அவர்களுக்கு வழங்கப்பட்ட மலேசியச் சாதனைப் புத்தக விருதின் டிஜிட்டல் நகல் மலேசியத் தேசிய ஆவணக்கப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மலேசியத் தேசிய ஆவணக்கப்பகத்தில் நடைபெற்ற ஆவண ஒப்படைப்பு நிகழ்வில் எழுத்தாளர் பாவை பெற்ற விருது உட்பட அது தொடர்பான புகைபடங்கள், வீடியோ ஒளிப்பதிவு ஆகியவற்றை டிஜிட்டல் கோப்பாக மலேசியத் தேசிய ஆவணக்கப்பகத்தின் நிர்வாகப் பிரிவு இயக்குனர் ஹாஜி நாசேர் அவர்களிடம் எழுத்தாளர் சங்கத் தலைவர் மோகனன் பெருமாள் ஒப்படைத்தார்.

இந்த விருதளிப்பு கடந்த நவம்பர் 30 ஆம்தேதி டேவான் பகாசா டான் புஸ்தாகா தலைமை இயக்குனர் டாக்டர் ஹாசாமி ஜாஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தலைவர் மோகனன் பெருமாளுடன் துணைப் பொருளாளர் திரு. மு.காசிவேலு, செயலவை உறுப்பினர் திரு. மன்மதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் பாவை அவர்களின் 60 ஆண்டுக்காலத் தமிழ் இலக்கியப் பயணம், பங்களிப்பு குறித்து விரிவாக விவரித்து விளக்கப்பட்டது.
அனைத்து விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்ட இயக்குனர் ஹாஜி நாசேர் அவர்கள், ஆவணக்காப்பகத்தின் கெடா அலுவலக அதிகாரிகள் எழுத்தாளர் பாவை இல்லத்திற்கு சென்று, அவரை நேர்முகப் பேட்டி எடுத்து காணொலியாக பாதுகாக்கப் படும் என்று தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!