
மலாக்கா, ஏப்ரல்-2,
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் மலாக்கா மாநில அளவிலான 2025 தேசிய ஒருமைப்பாட்டு வாரம் இவ்வாரம் அனுசரிக்கப்படுகிறது.
மலாக்கா அனைத்துலக வாணிப மையத்தில் ஏப்ரல் 4-ங்காம் 5-ஆம் தேதிகளில் நடைபெறும் இவ்விழா முற்றிலும் இலவசமாகும்.
குடும்பத்தோடு வரும் உங்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
‘எங்கள் வீடு கண்காட்சி’, பல்லின கலாச்சாரக் கண்காட்சி, பல்லின உணவு விழா, ‘நல்லதையே பேசுவோம் பிரச்சார இயக்கம்’, ஒருமைப்பாட்டு முகங்கள் கண்காட்சி போன்றவை அவற்றில் அடங்கும்.
தேசப் பற்றை விதைக்கும் தேசியக் கோட்பாடு காண்காட்சியும் உண்டு.
எனவே, ஏப்ரல் 4 சனிக்கிழமை, ஏப்ரல் 5 ஞாயிற்றுக் கிழமை என இரு நாட்களிலும் குடும்ப சகிதமாக வந்து, நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறுமாறு ஒருமைப்பாட்டு அமைச்சு மலாக்கா வாழ் மக்களை அழைக்கிறது.