
கோலாலம்பூர், ஜனவரி-28 – பினாங்கு துறைமுக கரையோரப் பகுதியில் ஒரு படகிலிருந்து சுடும் ஆயுதங்களை, கடல் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
5 கைத்துப்பாக்கிகள், ஒரு பெரிய துப்பாக்கி, 211 தோட்டாக்கள் உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.
கரையோரப் பகுதியில் கடத்தல் நடவடிக்கைக் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, போஸீல் அச்சோதனையில் இறங்கியது.
இதையடுத்து படகிலிருந்த 2 இந்தோனீசிய ஆடவர்கள், 2 உள்ளூர் ஆடவர்கள் என நால்வரும் கைதாகினர்.
உரிமம் அல்லது அனுமதியில்லாமல் சுடும் ஆயுதங்களை வைத்திருப்போருக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் 1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
கைப்பற்றப்பட்ட சுடும் ஆயுதங்களின் உண்மை மதிப்பு ஆராயப்பட்டு வருகிறது.