
பேங்காக், மார்ச் 7 – தாய்லாந்தில் ஆசையோடு ஐஸ்கிரிம் வாங்கிய ஆடவர் ஒருவர் அதன் உள்ளே உறைந்த நிலையில் பாம்பு ஒன்று மடிந்து கிடந்தது குறித்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
அந்த ஐஸ்கிரிமில் இருந்தது கோல்டன் டிரி ஸ்நேக் (golden tree snake) எனப்படும் விஷத்தன்மை கொண்ட பாம்பாகும் என கூறப்பட்டது.
இந்த வகை பாம்புகள் இந்தியா, வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்னாம் உட்பட பல நாடுகளில் இருக்கக்கூடியதாகும்.
ஐஸ்கிரிமில் உறைந்து மடிந்த நிலையில் காணப்படும் இந்த பாம்பு தொடர்பான காணொளி வைரலாகியதை தொடர்ந்து பலர் கிண்டலாக கருத்துக்களை பதிவிட்டனர்.
உஷ்ணமான சீதோஷ்ணத்தில் அந்த பாம்பு உயிர்பெற்றுவிடுமா என்று நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்தனர்.