Latestமலேசியா

ஒருவழியாக நாளை IGPயைச் சந்திக்கிறார் இந்திரா காந்தி; நற்செய்தி வரும் என எதிர்பார்ப்பு

கோலாலாபூர், டிசம்பர்-9 – 16 ஆண்டுகளாக மகள் பிரசன்னா தீக்ஷாவை காணாமல் தவிக்கும் தாய் இந்திரா காந்தி, நாளை டிசம்பர் 10-ஆம் தேதி தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ Mohd Khalid Ismail-லைச் சந்திக்கிறார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் நோக்கி நவம்பர் 22-ஆம் தேதி நடைபெற்ற ‘நீதிக்கான நடைபயணத்தின்’ போது இந்திராவால் IGP-யைச் சந்திக்க இயலாமல் போனது.

இந்நிலையில், நாளையச் சந்திப்பை சட்டசீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணையமைச்சர் எம். குலசேகரன் ஏற்பாடு செய்து, ஏற்கனவே தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளார்.

இதன் மூலம் 2019 ஏப்ரல் 19-ஆம் தேதிக்குப் பிறகு தேசியப் போலீஸ் படைத் தலைவருடன் இந்திரா காந்தி நடத்தும் முதல் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாக இது அமையவிருக்கிறது.

குழந்தையாக இருந்த போது, மதம் மாறிய முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட மகள் பிரசன்னா இருக்குமிடம் குறித்து தேடல்களின் முன்னேற்றங்களை IGP நாளையச் சந்திப்பில் பகிருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

IGP-யிடம் ஒப்படைப்பதற்காக, பிரசன்னாவின் பிரிவு, தாயின் துயரம் மற்றும் நம்பிக்கையை குறிக்கும் சின்னமாக, இந்திரா காந்தி தனது மகளின் teddy bear கரடி பொம்மையை எடுத்துச் செல்ல உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு முறையும் துவண்டு போனாலும் நம்பிக்கை இழக்காமல் மகளுக்காக போராடி வரும் இந்திரா காந்தியின் முயற்சியில் இது முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!